ஸ்ரார்த்தம்
ADDED :5285 days ago
முன்னோர்களுக்கு குறிப்பிட்ட திதி, அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரையில் ஸ்ரார்த்தம் செய்வார்கள். காரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை. இது ஸ்ரத்தை என்ற சொல்லில் இருந்து உருவானது. தந்தையை நினைவு கூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான். இதை அவனுடைய மகன் பார்க்கிறான். ஓ... நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார். அப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றும். இதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.