உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் தேரோடும் வீதியை சீரமைக்க கோரிக்கை

காளையார்கோவில் தேரோடும் வீதியை சீரமைக்க கோரிக்கை

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் தேரோடும் வீதியின் ஒருபகுதி ரோடு சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டள்ளது. காசி , ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக காளையார்கோவில் புண்ணிய தலமாக இருந்துவருகிறது. மூன்று சிவலாயங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சோமேஸ்வரர்-சவுந்தர நாயகி அம்மனுக்கு வைகாசி திருவிழா, சொர்ணகாளீஸ்வரர் -சொர்ணவள்ளி அம்மனுக்கு தைப்பூச திருவிழா, சொர்ணவள்ளி அம்மனுக்கு ஆடி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவதுவழக்கம். இத்தேரோட்டம் கோவிலை சுற்றிலும் கீழரதவீதி, தெற்கு ரதவீதி , தஞ்சாவூர்-சாயல்குடி ரோடு,மதுரை-தொண்டி ரோடு வழியாக நடைபெறும். மதுரை -தொண்டி தேசிய நெடுஞ்சாலை,தஞ்சாவூர்-சாயல்குடி நெடுஞ்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரிய கோபுர வாசலிருந்து, கீழரதவீதி, தெற்குரதவீதி ஊராட்சி நிர்வாகத்தில் இருந்துவருகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியை சுதர்சன நாச்சியப்பன் , எம்.பி ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரோடு சீரமைக்கப்பட்டது. ஒரு பகுதி பராமரிக்காமல் குண்டும்,குழியுமாக தார்ரோட்டை தேடும் அளவிற்கு மணல் குவிந்து காட்சியளிக்கிறது. மழை காலங்களில் சகதிக்காடாகவும், வெயில் காலங்களில் புழுதி காற்றில் பறந்து குடியிருப்பு பகுதி மற்றும் வர்த்தக நிறுவனங்களும் பாதித்துவருகிறது. ரோடு பாதிப்பால் ,இந்தவழியாக சென்றுவந்த அரசு மற்றும் தனியார் பஸ்களும் வேறுவழியில் சென்றுவருகிறது. புதிய தாலுகா அலுவலக பணிக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது. எம்.பி., எம். எல்.ஏ., மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நிதியினை பெற்று தேரோடும் வீதியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். ஊராட்சிதலைவர் அருள்ராஜ் கூறுகையில்,“ தன்னிறைவு திட்டத்தில் 24 லட்சத்திற்கும், சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., தொகுதி மேம்பாட்டுதிட்டத்தில் 25 லட்சத்திற்கும் தார்ரோடு போடப்பட்டுள்ளது . விடுபட்ட பகுதி சீரமைக்க ஊராட்சியில் நிதியில்லை. மாவட்டநிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. கிடைத்ததும் தேரோடும் வீதி சீரமைக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !