உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா கோதாவரி புஷ்கரம் இன்று துவக்கம்!

மகா கோதாவரி புஷ்கரம் இன்று துவக்கம்!

நகரி: ஆந்திராவில் கோதாவரி நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கோதாவரி புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. கடந்த 2003ல் கடைசியாக நடைபெற்ற இவ்விழா, தற்போது ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி, ஆந்திர அரசு ரூ.1,650 கோடி, மகாராஷ்டிர அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இன்று காலை 6.25 மணிக்கு துவங்கும் இவ்விழா, 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நாட்களில், 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !