உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவரேஸ்வரர் கோவில் குளம் புனரமைப்பு

திருவரேஸ்வரர் கோவில் குளம் புனரமைப்பு

மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினம், திருவரேஸ்வரர் கோவில் குளம், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்படுகிறது. கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், இந்துசமய அறநிலைய துறைக்குட்பட்ட திருவரேஸ்வர் கோவில் உள்ளது. கோவிலின் தீர்த்தமாக, கோவில் அருகில் குளம் உள்ளது. இந்த குளம், 80 சென்ட் பரப்பளவு; 10 அடி ஆழம் கொண்டது. நீண்டகாலமாக பராமரிப்பின்றி, துார்ந்து போனதால், குளத்தை துார்வாரி சீரமைக்கும்படி, கிராமவாசிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கோவிலை நிர்வகித்து வரும், மாமல்லபுரம், ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிர்வாகம், இதுகுறித்து, துறை அதிகாரிகளிடம் பரிந்துரைத்தது. அதை தொடர்ந்து ஆணையர், பொதுநல நிதி, ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, தற்போது சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறுகையில், ’குளத்தை துார்வாரி, கரையை பலப்படுத்தி, கற்களால் சாய்தளம் அமைக்கப்படும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !