ஆடிக்கு தயாராகும் கஞ்சி கலயம்
மானாமதுரை: மானாமதுரையில் ஆடியை முன்னிட்டு கஞ்சி கலயம் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு அதிகம் நடக்கிறது. ஒவ்வொரு மாத விசேஷ நாட்களை குறி வைத்து பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. வரும் வெள்ளி ஆடி பிறப்பால் கஞ்சிக் கலயம் தயாரித்து வருகின்றனர். ஆடியில் மாரியம்மன் கோயில்களில் கஞ்சிகலயம் ஏந்தி வலம் வரும் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். மானாமதுரை,திருப்புவனம்,தாயமங்கலம், இருக்கன்குடி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் ஆடி கஞ்சி கலய திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.இதற்காக மானாமதுரையில் பல்வேறு அளவுகளில் கஞ்சி கலயம் தயாரிக்கப்படுகிறது. 250மி.லி., 500மி.லி., 750மி.லி., ஒரு லிட்டர் போன்ற ஙீஙூஅளவுகளில் கலயங்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்பாளர் சோமு கூறுகையில்: நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கலயங்கள் தயாரிக்கலாம்.வெயில் அதிகமாக இருப்பதால் தற்போது கலயம் தயாரிப்பு அதிகளவு நடைபெறுகிறது.கலயங்களின் அளவிற்கு ஏற்ப 15 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். திருச்சி,மதுரை,விருதுநகர்,கோவை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு கஞ்சி கலயம் செல்கிறது, என்றார்.