கோபி முருகன் கோவில்களில் இன்று குருபெயர்ச்சி
ADDED :3776 days ago
கோபி: கோபி பவளமலை, பச்சமலையில் குரு பெயர்ச்சி விழாஇன்று(ஜூலை,14ல்) நடக்கிறது.பவளமலையில் இன்று காலை 10 மணிக்கு, குரு பெயர்ச்சி பரிகார ஹோமம், 11.30 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனை, 12.30 மணிக்கு தீபாராதனை, மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பச்சமலை முருகன் கோவிலில், இன்று காலை 8.30 முதல், 11 மணி வரை, குருப்பெயர்ச்சி கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம், சிறப்பு பரிகார ஹோமம் நடக்கிறது. பகல், 11.30 மணிக்கு தட்சிணா மூர்த்திக்கும், நவக்கிரஹ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு குரு பகவானுக்கு, 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனை, பகல், 11.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் செய்து வருகிறார்.