உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்து சமய இலக்கிய விழா!

காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்து சமய இலக்கிய விழா!

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், இந்து சமய இலக்கியப் பேரவை விழா நடந்தது. காரைக்கால், பாரதியார் சாலையில் அமைந் துள்ள, அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் நடந்த விழாவுக்கு, புலவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினர். சமாதான கமிட்டி உறுப்பினர்  தண்டபாணி, வர்த்தக சங்கத் தலைவர் அமுதா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம்  பெற்ற மாணவர்களுக்கு, கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கினர்.  முத்தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு விரு துகள் வழங்கப்பட்டது. காரை ரத்னா’ விருது, தண்டபாணிக்கும், முத்தமிழ்க்காவலர்’ விருது அமுதா ஆறுமுகத்திற்கும், கலைசீர் பரவுவார்’ விருது,  பாரிஸ் ரவிக்கும் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி  ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !