சாரங்கபாணி கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கடந்த, 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 2016ல் மகாமக திருவிழா நடைபெற வுள்ளதால், கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, திருப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாரங்கபாணி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டு ஜூலை, 9ம் தேதி பாலாலயம் தொடங்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் உபயதாரர்கள் மூலம், 2.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. திருப்பணிகள் றைவு பெற்றதை அடுத்து, கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த, 9ம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 10ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வந்து யாகசாலை நிகழ்ச்சிகளும் தொடங்கியது. தொடர்ந்து, ஆறு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் காலை, யாக சாலை மண்டபத்திலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது, காலை, 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், அரசு துறை அதி காரிகள், அரசியல் பிரமுகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.