திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்போற்சவம்!
ADDED :3774 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், மூன்று நாள் நடைபெறும், ஆனி மாத தெப்போற்சவம், நேற்று துவங்கியது.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஆனி அமாவாசையான நேற்று, மூலவர், உற்சவருக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டது. 17ம் தேதி வரை பெருமாள் முத்தங்கி சேவையில், பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.மூன்று நாள் நடக்கும் தெப்போற்சவம், நேற்று மாலை துவங்கியது. மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக உற்சவர் தெப்பத்தில் எழுந்தருளி, ஹிருத்தாப நாசினி குளத்தை, மூன்று முறை வலம் வந்து, இரவு 8:00 மணிக்கு, கோவிலுக்கு திரும்பினார். இரண்டாம் நாள் தெப்போற்சவம் இன்று மாலை நடைபெற உள்ளது.