கவுமாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வழிபாடு!
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில்,அதிகாலையிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். தேனி மாவட்டத்தில் வீரபாண்டி மாரியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக, பெரியகுளம் கவுமாரியம்மன் திருவிழா பிரசித்தி பெற்றது. கோயில் திருவிழா ஜூலை 6 ல் கொடி யேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தினமும் குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். ஜூலை 21 ல் மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராஜா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., உமாமகேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.