கருப்பன் வரவு
ADDED :3749 days ago
சாம்பிராணி மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கருப்பனின் சலங்கை சத்தம் காதிலே ஒலிக்குது
வீச்சரிவாள் கையிலேந்தி வேகமாக நடை நடந்து
கருப்பன் வரும் காலடி சத்தம் இடியாக முழக்குது
கழன்றாடு மாந்தடியும் சுற்றி வரும் பகை விரட்ட
பேய் பில்லி சூனியத்தை பிரம்பாலே ஒட்டிவைக்க
தலைமாடு காவல் காக்க கருப்பன் வரும் நேரமெல்லாம்
வீடெங்கும் சுற்றிச் சுற்றி ஜில்ஜில் என்று ஒலிக்குது
ஆறடியான் சன்னதியில் அருளாட்டம் நடக்குது
அள்ளித்தரும் திருநீரில் புள்ளியெல்லாம் சிறக்குது.
- அருண் வீரப்பா. மதுரை.