முருக்குமீசை கருப்பசாமி!
முருக்குமீசை கறுப்பசாமி ஓடிவாராரு
சாமி ஆடிவாராரு
முண்டாசுப் பேரழகன் இங்கே வாராரு
சாமி ஆடிவாராரு
கருத்தமேனி அழகுக்கார கறுப்பர் வாராரு
சாமி ஆடிவாராரு
கைஅரிவாள் பளபளக்க ஆடிவாராரு
விளையாடி வாராரு! (முருக்கு மீசை)
வெள்ளைக் குதிரை ஏறிக் கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
வேகமாக வந்திறங்கி ஆடிவாராரு
விளையாடி வாராரு (முருக்கு மீசை)
ஆடிப்பாடி நாம் அழைக்க கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
ஆனந்தமாய்ச் சிரித்துக்கொண்டே காட்சிதாராரு
கறுப்பர் காட்சிதாராரு (முருக்கு மீசை)
அதிர்வேட்டுச் சிரிப்புடனே கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
ஆளுயர அரிவாளை எடுத்து வாராரு
கறுப்பர் ஆடிவாராரு! (முருக்கு மீசை)
கால்சிலம்பு கலகலக்கக் கறுப்பர் வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
கை அரிவாள் மினுமினுக்க ஆடிவாராரு
கறுப்பர் ஆடிவாராரு! (முருக்கு மீசை)
மேளதாளம் முழங்கிடவே கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
மேலாடை பளபளக்க ஆடிவாராரு
விளையாடி வாராரு! (முருக்கு மீசை)
சுக்குமாந் தடிசுற்றிக் கறுப்பர் வாராரு
நம்ம கருப்பர் வாராரு
ஜோராகப் பட்டுத்திக் கறுப்பர்வாராரு
நம்ம கருப்பர் வாராரு! (முருக்கு மீசை)
பகையழித்து வெற்றிகொண்ட கறுப்பர் வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
பள்ளயங்கள் பார்த்துமகிழ நேரில்வாராரு
சாமி நேரில் வாராரு! (முருக்கு மீசை)
பட்டுவேட்டி பளபளக்கக் கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
பக்கபலம் நானே என்று சொல்லிவாராரு
கறுப்பர் சொல்லிவாராரு! (முருக்கு மீசை)
அரிவாளைக் கைபிடித்து ஆடிவாராரு
நம்ம கறுப்பர் வாராரு
ஆனந்தமாய்ச் சிரித்துக் கொண்டே காட்சித்தாராரு
கறுப்பர் காட்சிதாராரு! (முருக்கு மீசை)
காடுவீடு காவலான கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
காக்கும் தெய்வம் நானே என்று சொல்லி வாராரு
கறுப்பர் காட்சிதாராரு! (முருக்கு மீசை)
கருத்தமேனி அழகுக்காரக் கறுப்பர்வாராரு
நம்ம கறுப்பர் வாராரு
காவல்தெய்வம் கறுப்பசாமி ஆடிவாராரு
விளையாடி வாராரு! (முருக்குமீசை)
கஷ்டம் கவலை போக்கிடவே கறுப்பர் வாராரு
நம் கறுப்பர் வாராரு
காவல்தெய்வம் முன்னோடியான் நேரில் வாராரு
விளையாடி வாராரு! (முருக்கு மீசை)