கருப்பசாமி அழைப்புப் பாடல்
ADDED :3774 days ago
அண்ணன் வாரார் தம்பி வாரார்
காயாம்பு நீலமேக வண்ணன் வாரார்
கச்சை மணி சலங்கை கலகல என்றே ஒலிக்க
ஈட்டி சமுதாடு பளபள என மின்னவே
வாள் எடுத்து கச்சை கட்டி வாகானகுதிரை ஏறி
சத்தியமாய் பாராளும் மன்னரெல்லாம் போற்றிநிற்க
பாரோங்கும் பதினெட்டாம் படி கருப்பர்
கூர் அரிவாள் மீதேறி நின்று விளையாடுவதற்கு
தேசத்து ஞாயமெல்லாம் தீர்ப்பதற்கு துடிகருப்பர்
வம்பு செய்யும் கள்ளப்பிசாசுகளை ஓட்டிவைக்க
வள்ளலைப்போல் தந்து உதவி ஏழைகளை ஆதரிக்க
சேமம் குதிரைதனில் வேகவேகமாய் ஓடிவாரார்.