உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊஞ்சல் சேவையில் தேவனாம்பட்டினம் முத்தாலம்மன்!

ஊஞ்சல் சேவையில் தேவனாம்பட்டினம் முத்தாலம்மன்!

கடலூர்: தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடந்தது. கடலூர் தேவனாம்பட்டினம்  முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பால் அபிஷேகம், 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 16ம் தேதி காலை  அபிஷேகம், மாலை மலர் அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று (17ம் தேதி)  காலை 9:00 மணிக்கு கரகம் எடுத்தல், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மதியம் 3:00 மணிக்கு செடல், இரவு 7:00 மணிக்கு கும்பமிடுதல், இரவு  வீதியுலா நடந்தது. இன்று (18ம் தேதி) காலை 7:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !