நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா!
ADDED :3764 days ago
புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று நடந்தது. நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா கடந்த 9 ம் தேதி, கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 12ம் தேதி, 108 சிறுமியர்களுக்கு கன்னிகா வந்தனம், நலங்கு பூ ஜைகள் நடந்தது. 13 ம் தேதி, சிறப்பு பூஜைகள் நடந்தது. தினம் இரவில் சிறப்பு அங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று தேர் திருவிழா, செடல் உற்சவம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் உடலில் அலகு குத்தி, கார், ஆட்டோ, வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கடலுாரில் இருந்து புதுச்சேரி வந்த வாகனங்களும், புதுச்சேரியில் இருந்து கடலுார் சென்ற வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.