கடலூர் தேவி கருமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்!
ADDED :3766 days ago
கடலூர்: கடலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் 39ம் ஆண்டு ஆடித் திருவிழா மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந் தது. இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு பெண்ணையாற்றிலிருந்து கரகம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து 12:00 மணிக்கு பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், கும்பம் கொட்டுதலும், இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.