உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளந்தை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம்!

விளந்தை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மனுக்கு பக்தர்கள் 108 பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். விளந்தை மாரியம்மன்  கோவிலில் ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. காலை 7:30 மணிக்கு பக்தர்கள்  தென்பெண்ணையில் நீராடி, 108 பால்குடம் ஊர்வலத்தை துவங்கினர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பால் குடங்கள் ஊர்வலம் கோவிலை  சென்றடைந்தது.  அம்மனுக்கு பக்தர்கள் எடுத்துவந்த பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,  மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல், சாகை வார்த்தல், செடல்  உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !