முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :5218 days ago
காயல்பட்டணம்: காயல்பட்டண மன்னராஜா கோயில் தெருவில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் ஜூர்னோதாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது.காயல்பட்டண முத்தாரம்மன் கோயிலில் கடந்த வெள்ளிகிழமையிலிருந்து நிகழ்ச்சி நடந்து இறுதி நாளன்று அதிகாலை 4ம் கால யாகபூஜை ஸ்பர்சாகுதி நாழ சந்தானம் திரவ்யாகுதி மகா பூர்ணாகுதி தீபாராதனை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலையில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. கும்பாபிஷேக கூட்டத்திற்கு மன்னராஜா கோயில் தெரு தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.