உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமணலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளியிலுள்ள பழமைவாய்ந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளியில், 900 ஆண்டு பழமை வாய்ந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது. இக்கோவிலில், மூலஸ்தானம், விமான கோபுரம், அர்த்த மண்டபம் ஆகியவை சிற்ப சாஸ்திர முறைப்படி புணரமைக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மறுநாள் (15ம் தேதி) காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9.00 மணிக்கு விமான கும்பாபிஷேகம், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தச தரிசனம் ஆகியவையும் நடக்கிறது. காலை 11.00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஜமீன்ஊத்துக்குளி பரம்பரை அறங்காவலர் காளிங்கராயர் குடும்பத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !