திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் தேரோட்டம்
ADDED :5216 days ago
திருப்புத்தூர் : திருக்கோளக்குடி திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்பாள் கோயில் ஆனித் தேரோட்டம் நடந்தது. கடந்த ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 9ம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.காலை 10 மணிக்கு சுவாமி,அம்பாள் தேர்களிலும், விநாயகர்,முருகர்,சண்டிகேஸ்வரர் ஆகியோர் சப்பரங்களிலும் எழுந்தருளினர்.குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது.