கோவில்களில் சுவாமி தரிசன கட்டணம்: ரத்து கோரி ஆர்ப்பாட்டம்
ADDED :3751 days ago
சென்னை: கோவில்களில் சுவாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மற்றும் வடபழனி முருகன் கோவில் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல், தமிழகம் முழுவதும், பல மாவட்டங்களில் உள்ள கோவில்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணியினர் பெருமளவில் பங்கேற்றனர். இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும், கோவில்களில் விசேஷ காலங்களில் கட்டணங்கள் வசூலிப்பது உட்பட, பல்வேறு நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடந்த இடங்களில் பாதுகாப்பு கருதி, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.