உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சன்னிதானத்தின் தென்கிழக்கு மூலையில் புதிய பிரசாத மண்டபம்!

சபரிமலை சன்னிதானத்தின் தென்கிழக்கு மூலையில் புதிய பிரசாத மண்டபம்!

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தின் தென்கிழக்கு மூலையில் புதிதாக பிரசாத பிளான்ட் அமைக்கவும், அன்னதான மண்டபத்தை தேவசம்போர்டு நேரடியாக கட்டவும் உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சபரிமலை மாஸ்டர்பிளான் உயர்மட்ட கமிட்டி கூட்டம் நேற்று சன்னிதானத்தில் அதன் தலைவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, குமாரன், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கேரள வாஸ்து நிபுணர் காணிபையூர் புதிய பணிகள் செய்வதற்கான இடங்களை தேர்வு செய்தார் .இதில் சன்னிதானத்தில் கோயில் சுற்றளவை முடிவு செய்து தென்கிழக்கு மூலையில், தற்போது வெள்ளை நிவேத்யம் தயாராகும் புதிதாக அரவணை மற்றும் அப்பம் தயாரிக்கும் பிரசாத பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இங்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய அரவணை தயாரிப்பு இயந்திரம் பொருத்தப்படுகிறது. மேலும் மாளிகைப்புறம் கோயிலுக்கு பின்புறம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பணி நடைபெறாமல் உள்ள பிரசாத மண்டபத்தின் பணியை தேவசம்போர்டு நேரடியாக செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீகோயிலை சுற்றி 63 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து அப்புறப்படுத்தவும், மாளிகைப்புறம் கோயிலில் உள்ள மணிமண்டபத்தை மட்டும் அப்படியே வைத்து விட்டு அதில் புனரமைப்பு பணிகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. நடைதிறப்பு: சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி திறந்து ஆடி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி இரவு பத்து மணி வரை நடை திறந்திருக்கும். 22-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !