ஆதி கைலாசநாதர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம்!
ADDED :3748 days ago
ஆவடி: ஆவடி அடுத்த ஜே.பி., எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மங்களாம்பிகை சமேத ஆதி கைலாசநாதர் கோவிலில், சைவ திருமறை புகழ் விளங்கும் வகையில், சிவனுக்கு ருத்திராட்ச அபிஷேகம் நடந்தது.அதில், 10 லட்சம் ருத்திராட்சம் சார்த்தப்பட்டது. நேற்று காலையில், திருக்கைலாய வாத்திய இசை ஒலிக்க, பன்னீர் மற்றும் திருநீர் அபிஷேகமும் நடந்தது.