உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசூரியபெருமான் கோவிலில் மகாபிஷேகம்

சிவசூரியபெருமான் கோவிலில் மகாபிஷேகம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கென்றே அமையப்பெற்ற ஒரே கோவில். இங்கு சூரியன் மூலவராகவும், சூரியனை பார்த்தவாறு குருபகவானும், ஏனைய கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவலில், பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறும். அதன்படி நேற்று, ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை, 10 மணிக்கு மூலவர் சூரியபகவான் சன்னதி எதிரில், சிறப்பு ஹோமம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுப்ரமணியதம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார். உற்சவர் உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரிய பெருமானுக்கு மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஸ்வாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு புஷ்பலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !