சொக்கநாதர் கோயிலில் ஆனித் திருக்கல்யாணம்
ADDED :5215 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனிவிழா திருக்கல்யாணம் நடந்தது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி திருவிழா கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாள் நிகழ்ச்சியான நேற்று மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. திருமண மண்டபத்தில் நடந்ததால் திருக்கல்யாணத்திற்கு அறநிலைய துறை சார்பாக பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்ற பக்தர்கள் திருக்கல்யாணத்தை பார்க்க முடியாமல் திரும்பினர். "இது போன்ற நிகழ்ச்சிகளை பொதுவான இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் ,என, பக்தர்கள் கூறினர்.