உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ க்ருஷ்ண அவதாரத்தின் காரணம்

ஸ்ரீ க்ருஷ்ண அவதாரத்தின் காரணம்

1. ஸாந்த்ரா நந்ததனோ ஹரே நநு புராதைவாஸுரே ஸங்கரேத்வத்க்ருத்தா அபி கர்மசேஷ வசதோயே தே ந ஆதா கதிம்தேஷாம் பூதலஜந்மநாம்திதிபுவாம் பாரேண தூரார்திதாபூமி: ப்ராப விரிஞ்சமாச்ரிதபதம்தேவை: புரைவாகதை:பொருள்: ஆனந்தமே வடிவமாக நிற்பவனே! குருவாயூரப்பா! முன்னர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில், உனது அடியவர்களான தேவர்களைக் காப்பாற்ற, பல அசுரர்களை நீ கொன்றாய். அப்படி உன்னால் கொல்லப்பட்ட அசுரர்கள் மோட்சம் பெற்றனர். ஆனால் காலநேமி போன்ற அசுரர்களுக்கு பாவ புண்ணியங்கள் மீதம் இருந்தன. இதனால் அவர்கள் பூமியில் மீண்டும் பிறந்தனர். இவர்கள் போன்று அசுரர்களின் பாரம் தாங்காமல் பூதேவி வருந்தயபடி ப்ரும்மாவிடம் முறையிடச் சென்றாள். ஆனால் அதற்கு முன்பாகவே தேவர்கள் அங்கே இருந்தனர். (உன்னை வேண்டினர்).2. ஹா ஹா துர்ஜநபூரி பாரமதிதாம்பாதோ நிதௌ பாதுகாம்ஏதாம் பாலய ஹந்த மே விவ சதாம்ஸம்ப்ருச்ச தேவாநிமாம்இத்யாதி ப்ரசுர ப்ரலாப விவசாம்ஆலோக்ய தாதா மஹீம்தேவாநாம் வதநாநி வீக்ஷ்ய பரிதோதத்யௌ பவந்தம் ஹரேபொருள்: குருவாயூரப்பா! பூதேவி ப்ரும்மாவிடம், கஷ்டம்! கஷ்டம்! தீயவர்கள் பாரத்ததால் நான் துக்கப்படுகிறேன். இதனால் நான் துக்கம் என்ற கடலில் மூழ்குகிறேன். எனது இந்த அவல நிலையை நீங்கள் தேவர்களிடம் கேட்டு அறிந்து கொள்க! என்று கூறினாள். இதனைக் கேட்ட ப்ரும்மா அவள் நிலையையும், அங்கிருந்த தேவர்களையும் பார்த்தார், பின்னர் உன்னைத் த்யானிக்கத் தொடங்கினார்.3. ஊசே ச அம்புஜ பூ: அமூந் அயிஸுரா: ஸத்யம் தரித்ரியா வச:நத்வஸ்யா பவதாம் ச ரக்ஷண விதௌ தக்ஷோ ஹி லக்ஷ்மீபதி:ஸர்வே சர்வபுரஸ்ஸரா வயமிதோகத்வா பயோவாரிதிம்நத்வா தம் ஸ்துமஹே ஜவாதிதியயு: ஸாகம் தவாகேதநம்பொருள்: குருவாயூரப்பா! ப்ரும்மா அவர்களிடம், பூமிதேவி கூறியதை நான் உண்மை என்று ஞானப்பார்வை மூலம் அறிந்தேன். லட்சுமியின் நாயகனான ஹரி ஒருவன் மட்டுமே உங்களையும் பூமியையும் காக்க முடியும். சிவனையும் அழைத்துக் கொண்டு நாம் அனைவரும் விரைவாகத் திருப்பாற் கடல் செல்வோம். அங்கு அவனை வணங்குவோம் என்றார். பின்னர் அனைவருமாக உனது இடத்திற்கு வந்தனர் அல்லவா?4. தே முக்தாநிலகாலி துக்தஜலதேஸ்தீரம்கதா: ஸங்கதா:யாவத் த்வத்பத சிந்தநைக மநஸஸ்தாவத்ஸ பரதோஜ பூ:த்வத்வாசம் ஹ்ருதயே நிசம்ய ஸகலாந் ஆநந்தயந்ஊசிவாந்ஆக்யாத: பரமாத்மநா ஸ்வயம்அஹம் வாக்யம் ததாகர்ணயதாம்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! பின்னர் ப்ரும்மா. சிவன் முதலானோர் இணைந்து குளிர்வாகவும் மணம் வீசுவதாகவும் உள்ள காற்றைக் கொண்டுள்ள பாற்கடலை அடைந்தனர். அங்கு உன்னைத் த்யானித்தனர். அப்போது நீ ப்ரும்மாவுக்கு மாத்திரம் உனது உள்ளத்தில் தோன்றியதை அவர் உள்ளத்தில் தெரியச் செய்தாய். அவர் தேவர்களிடம் நீ கூறியதை கூறப் போவதாகக் கூறினார்.5. ஜாநே தீந தசாமஹம் திவிஷதாம்பூமேச்ச பீமைர் ந்ருபை:தத்க்ஷேபாய பவாமி யாதவகுலேஸோஹம் ஸமக்ராத்மநாதேவா வ்ருஷ்ணிகுலே பவந்துகலயா தேவாங்க நாச்சாவநௌமத்ஸேவார்த்தம் இதி த்வதீயவசநம்பாதோஜபூ: ஊசிவாந்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ கூறியதாக ப்ரும்மா கூறிய சொற்கள் அசுரர்களால் தேவர்களுக்கும் பூமிதேவிக்கும் உண்டாகிய துக்கத்தை நான் அறிவேன். இவர்களுடைய துயரங்களை நீக்குவதற்காக நான் யாதவகுலத்தில் என்னுடைய பரிபூர்ண உருவத்துடன் பிறப்பேன். தேவர்கள் வ்ருஷ்ணி குலத்தில் பிறப்பார்கள். தேவலோகப் பெண்கள் அவர்களுடன் பூமியில் பிறப்பார்கள்.6. ச்ருத்வா கர்ணரஸாயனம் தவ வச:ஸர்வேஷு நிர்வாபிதஸ்வாந்தேஷ்வீச கதேஷு தாவகக்ருபா பீயூஷ த்ருப்தாத்மஸுவிக்யாதே மதுராபுரே கில பவத்ஸாந்நித்ய புண்யோத்தரேதந்யாம் தேவக நந்தநாம் உதவஹத்ராஜா ஸ சூராத்மஜ:பொருள்: குருவாயூரப்பனே! காதுகளுக்கு இனிமை அளிப்பதான உனது சொற்களை (ப்ரும்மா மூலமாக) தேவர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் இருந்த சோகம் நீங்கியது. உனது கருணையால் மகிழ்வுடன் சென்றனர். உன்னுடைய சாந்நித்யத்தால் மிகவும் புண்ணியமாகவும் சிறப்புற்றும் விளங்கிய மதுராபுரியின் அரசனாக சூரஸேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மகன் தேவகனின் மகளான தேவகியை, வஸுதேவர் மணந்து கொண்டார் அல்லவா?7. உத்வாஹாவஸிதௌ ததீய ஸஹஜ:கம்ஸ: அத ஸம்மாநயந்ஏதௌ ஸுததயா கத: பதி ரதேவ்யோமோத்தயா த்வத்கிராஅஸ்யாஸ்த்வாம் அதிதுஷ்டம் அஷ்டமஸுதோ ஹந்தேதி ஹந்தேரித:ஸந்த்ராஸாத்ஸ து ஹந்துமந்திககதாம் தந்வீம் க்ருபாணீமதாத்பொருள்: குருவாயூரப்பா! திருமணம் முடிந்த பின்னர் இருவரும் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைக் கவுரப்படுத்தும் வகையில், தேவகியின் சகோதரனான கம்ஸன், தானே அவர்கள் தேரை ஓட்டிச் சென்றான். அந்த நேரம் வானத்தில் ஓர் அசரீரி. மிகவும் கொடியவனான உன்னை இவர்களது எட்டாவது மகன் கொன்று விடுவான். என்று கேட்டது. இதனைக் கேட்ட கம்ஸன் பயத்துடனும், கோபத்துடனும் அருகில் இருந்த தேவகியைக் கொல்வதற்காகத் தனது கத்தியை எடுத்தான். கொடுமை!8. க்ருஹ்ணானச் சிகுரேஷு தாம் கலமதி:சௌரேச்சிரம் ஸாந்த்வநை:நோ முஞ்சந் புனராத்மஜார்ப்பண கிராப்ரீதோ அத யாதோ க்ருஹாந்ஆத்யம் த்வத்ஸஹஜம் ததா அர்ப்பிதம்அபி ஸ்நேஹேந நாஹந்நஸௌதுஷ்டாநாம் அபி தேவ புஷ்டகருணாத்ருஷடா ஹி தீரேகதாபொருள்: குருவாயூரப்பனே! அறிவற்ற கம்ஸன் தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வஸுதேவர் சமாதானம் கூற முயன்றும் அவன் விடவில்லை. வஸுதேவர், தனக்குப் பிறக்கும் குழந்தைகளை அவனிடமே தருவதாகக் கூறினார். இதற்கு இணங்கிக் கம்ஸன் அவளை விடுத்தான். இதன்படி தனக்குப் பிறந்த முதல் குழந்தையை, உனது சகோதரனை, கம்ஸனிடம் அளித்தார். ஆயினும் மனம் இரங்கி அவன் அந்தக் குழந்தையைக் கொல்லவில்லை. சில நேரங்களில் கொடியவர்களுக்கு கருணை தோன்றுவது வியப்பே!9. தாவத்த்வந் மநஸைவ நாரதமுநி:ப்ரோசே ஸ போஜேச்வரம்யூயம் நந்வஸுரா: ஸுராச்ச யதவோஜாநாஸி கிம் ந ப்ரபோமாயாவீ ஸ ஹரி: பவத் வதக்ருதேபாவீ ஸுரப்பரார்த்தநாத்இத்யாகர்ண்ய யதூநதூதுநதஸௌசௌரேச்ச ஸுநூந ஹந்பொருள்; குருவாயூரப்பா! அந்த நேரம் உனது எண்ணத்தால் நாரதர் அங்கு வந்தார். அவர் கம்ஸனிடம், ப்ரபுவே! நீ அசுரர் அல்லவா? யாதவர்கள் தேவர்கள் அல்லவா? மாயாவியான மஹாவிஷ்ணு உன்னைக் கொல்லவே யாதவக் குலத்தில் தோன்றப் போகிறான் என்றார். இதனைக் கேட்ட கம்ஸன் வஸுதேவரின் பிள்ளைகளைக் கொன்றான். யாதவர்களையும் விரட்டியடித்தான்.10. ப்ராப்தே ஸப்தம கர்ப்பதாம் அஹிபதௌத்வத் ப்ரேரணாந்மாயயாநீதே மாதவ ரோஹிணீம் த்வம் அபி போ:ஸச்சித்ஸுகைகாத்மக:நேவக்யா ஜடரம் விவிசித விபோஸம்ஸ்தூயமாந: ஸுரை:ஸ த்வம் க்ருஷ்ண விதூய ரோகபடலீம்பக்திம் பராம் தேஹி மேபொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மாதவனே! தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் ஆதிசேஷன் தோன்ற, உன் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை யோகமாயை ரோஹிணியின் வயிற்றில் சேர்த்தாள். ஆனந்தமே வடிவமாக உள்ள நீ, தேவகியின் கர்ப்பத்தில் நுழைந்தாய். உன்னைத் தேவர்கள் துதித்தனர் அல்லவா? இப்படியான செயல்கள் புரிந்த நீ, எனது பிணிகளை நீக்கி, உன்னிடத்தில் மிகுந்த பக்தி உண்டாக்க வேண்டும்.ஸ்ரீ க்ருஷ்ணன் பிறப்பு1. ஆனந்த ரூப பகவந் அயி தேவதாரேப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமாணை:காந்தி வ்ரஜைரிவ கநாகந மண்டலை: த்யாம்ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலாபொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஆனந்த வடிவவே! நீ பிறந்த நேரம் வந்தபோது வானம் முழுவதும் மழை மேகங்களால் மூடப்பட்டு இருந்தன. உன்னுடைய நீல நிறமான மேனியில் தோன்றிய நிறத்தைப் போன்றே அவை இருந்தன.2. ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை:ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜநேஷுநைசாகர: உதயவிதௌ நிசி மத்யமாயாம்க்லேசாபஹஸ்த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:பொருள்; க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! மழை பொழிந்து அனைத்து திசைகளிலும் நன்கு குளிர்ந்து இருந்தது. நல்லவர்கள் எண்ணம் அனைத்தும் கைகூடுவதால் அவர்கள் மகிழ்ந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில், நடு இரவில், சந்திரன் உதயமாகும்போது, இந்த உலகில் உள்ள துன்பங்களை நீக்குபவனாக நீ பூமியில் க்ருஷ்ணனாகத் தோன்றினாய் அல்லவா?3. பால்ய ஸ்ப்ருசாபி வபுஷா ததுஷா விபூதி:உத்யத் க்ரீட கடகாங்கத ஹரா பாஸாசங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேநமேகாஸிதேந பரிலேஸித ஸுதிகேஹேபொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ குழந்தையாக இருந்த போதிலும் பலவிதமான ஐச்வர்யங்களை உடையவனாக ஒளிவீசும் க்ரீடம், தங்க வளையல்கள், தோள்வளை ஹாரம் ஆகிய இவற்றால் ஒளியுடையதும், சங்கு, சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றால் விளங்குவதும் ஆகிய நீலமேக வண்ணனாக இருந்தாய் அல்லவா?4. வக்ஷ: ஸ்த்தலீ ஸுகநிலீந விலாஸி லக்ஷ்மீமந்தாக்ஷ லக்ஷித கடாக்ஷ விமோக்ஷ பேதை:தந்மந்திரஸ்ய கல கம்ஸ க்ருதாம் அலக்ஷ்மீம்உந்மார்ஜயந்நிவ விரேஜித வாஸுதேவபொருள்; க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வாஸுதேவனே! உனது திருமார்பில் மிகவும் சுகமாக மஹாலக்ஷ்மி அமர்ந்திருந்தாள். அவளது கடைக்கண் பார்வை அந்த அறையின் மீது பட்டது. அந்த அறையில் இதுவரை கம்ஸனால் ஏற்பட்டிருந்த அவலக்ஷ்மியின் ஆதித்தம் அகன்றது. இப்படியாக நீ மங்களகரமாக இருந்தாய்.5. சௌரிஸ்து தீரமுநி மண்டல சேதஸ: அபிதூரஸ்த்திதம் வபுருதீக்ஷ்ய நிஜேக்ஷணாப்யாம்ஆனந்தபாஷ்ப புலகோத்கம கத்கதார்த்ர:துஷ்டாவ த்ருஷ்டி மகரந்த ரஸம் பவந்தம்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகுந்த ஞானிகளான முனிவர்கள் மனதிற்குக் கூட எட்டாத உனது திருமேனியை வஸுதேவர் தன் கண்களால் கண்டார். கண்களில் ஆன்ந்தக் கண்ணீர் பெருகியது. மயிர்க்கூச்சல் அடைந்தார்; நெஞ்சம் தழுதழுத்தது. மிகுந்த அன்புடன் மகரந்தரஸம் போன்று இருந்த உன்னைத் துதித்தார்.6. தேவ ப்ரஸீத பரபூருஷ தாபவல்லீநிர்லூ நிதாத்ர ஸமநேத்ர கலாவிலாஸிந்கேதாந பாகுரு க்ருபாகுருபி: கடாக்ஷை:இத்யாதி தேந முதிதேந சிரம் நுதோ ஆபூ:பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை வாஸுதேவர் எப்படித் துதித்தார் - தேவனே! பரம புருஷனே! வேதனைகளான கொடிகளை அறுக்கும் வாள் போன்றவனே! அனைவரையும் ஆள்பவனே! உனது லீலைகள் மூலம் பெருமை பெற்றவனே! கருணை பொங்கும் உனது கடைக்கண் பார்வை மூலம் என் துயரங்களை நீக்க வேண்டும் - என்று நீண்ட நேரம் துதித்தார்.7. மாத்ரா ச நேத்ர ஸலிலாஸ்த்ருத காத்ரவல்யாஸ்தோத்ரை ரபிஷ்டுத குண: கருணாலயஸ்த்வம்ப்ராசீநஜந்ம யுகலம் ப்ரதிபோத்ய தாப்யாம்மாதுர்கிரா ததித மாநுஷ பால வேஷம்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஆனந்தக் கண்ணீரால் நனைந்த கொடி போன்ற உனது தாய் தேவகி உன்னைத் துதித்தாள். நீ உனது தாய் தந்தைக்கு அவர்களின் முந்தைய இரண்டு பிறவிகளைப் பற்றிக் கூறினாய். கருணையே உருவான நீ, உனது தாய் உன்னை வேண்டியவுடன் மனிதக் குழந்தையாக உருவம் கொண்டாய். (முந்தைய பிறவிகள்: அதிதி + காச்யபர்: ப்ருச்நி + ஸுதபஸ்)8. த்வத் ப்ரேரிதஸ்ததநு நந்த தநூஜயா தேவ்யத்யாஸ மாரசயிதும் ஸ ஹி சூரஸுநு:த்வாம் ஹஸ்தயோரதித சித்த விதார்யம் ஆர்யை:அம்போருஹஸ்த கலஹம்ஸ கிசோர ரம்யம்பொருள்: க்ருஷ்ணா!  குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னை நந்தகோபரின் இல்லத்தில் கொண்டு விடும்படி வஸுதேரை பணித்தாய். இதனால் யோகிகளாலும் தங்கள் மனதில் பதிக்கப்பட வேண்டியவரான வஸுதேவர், தாமரை மலரில் உறங்கும் அன்னத்தின் குஞ்சு போன்று அழகுடன் இருந்த உன்னை தனது கைகளில் எடுத்துக் கொண்டார்.9. ஜாதா ததா பசுபஸத்மநி யோகநித்ராநித்ரா விமுத்ரிதம் அதாக்ருத பௌரலோகம்த்வத் ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்த்வாரை: ஸ்வயம் வ்யகடி ஸங்கடிதை: ஸுகாடம்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய கட்டளையின்படி யோகமாயை நந்தகோபர் வசித்த கிராமத்தில் அவதரித்தாள். அங்கு உள்ள அனைவரும் அவளால் தூங்க வைக்கப்பட்டனர். கம்சனின் சிறையில் நீ இருந்த அறையின் வாயிலில் இருந்து பூட்டுகள். கதவுகள் தாமாகவே திறந்ததாமே! என்ன வியப்பு!10. சேஷேண பூரிபணவாரித வாரிணா அதஸ்வைரம் ப்ரதர்சிதபதோ மணிதீபிதேனத்வாம் தாரயந் ஸ கலு தந்யதம: ப்ரதஸ்த்தேஸ: அயம் த்வம் ஈச மம நாசய ரோகவேகாந்பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அளவற்ற புண்ணியம் செய்திருந்த வஸுதேவர் உன்னை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் (கோகுலத்திற்கு). அப்போது பெய்த மழையைக் குடைபோல் தனது படங்கள் மூலமாக ஆதிசேஷன் தடுத்தான். இரவு சூழ்ந்திருந்த அந்த வேளையில் தனது மாணிக்கம் மூலமாக பாதையைக் காண்பித்தான். உன்னுடன் தொடர்ந்து வந்தான். என்னுடைய பிணிகளை நீ நீக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !