உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் அரபு சாஹிப் பள்ளிவாசல் கந்தூரி ஊர்வலம் !

முத்துப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் அரபு சாஹிப் பள்ளிவாசல் கந்தூரி ஊர்வலம் !

திருவாரூர்: முத்துப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரபு சாஹிப் பள்ளி வாசல் கந்தூரி ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபு சாஹிப் ஆண் டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டி கைக்குப் பின் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா நேற்று முன் தினம் மாலை துவங்கியது. விழா கமிட்டியினர் முன்னிலையில் அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலிலிருந்து கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் புறப்பட்டது. இதில் மலர்களால் அலங்கரிக் கப்பட்ட 2 பூப்பல்லாக்கு, கண்ணாடிகளால் அதிகரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்குகளால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய குதிரைகள் ஊர்வலத்துடன் புறப்பட்டது. ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சா லை, பங்களாவாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டான்ட், திருத்துறைப் பூண்டி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றது. அங்கிருந்து ஊர்வலம்  பெரிய கடைத்தெருச் சென்று மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவாசலை சென்றடைந்தது.  அங்கு இரவு 9.00 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு கொடி மரத்தில் புனித கொடி ஏற்றபட்டது. இதற்காக நகர் முழுவதும் சாலை இரு புறங்களிலும்  முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் தலைமையில் ஆயிரக்கண க்கான போலீசார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.  மேலும் கந்தூரி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கலவரத்தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அதே போன்று பல்வேறு பகுதியில் உயர கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !