புனித தோமையார் ஆலய திருவிழா
ADDED :5215 days ago
பேய்க்குளம்:பேய்க்குளத்தில் புனித தோமையார் ஆலய பெருவிழா நடந்தது.பேய்க்குளம் தோமையார்புரத்தில் உள்ள புனித தோமையார் ஆலய பெருவிழா 10 நாட்கள் நடந்தது. கொடியேற்ற நாளன்று ஜெபமாலை, புனிதரின் பிரார்த்தனை, திருப்பலி கொடியேற்றம் நடந்தது. 9ம் திருநாளன்று திருவிழா சிறப்பு மாலை ஆராதனை மற்றும் புனிதரின் திருஉருவ சப்பரபவனி நடந்தது. 10ம் திருநாளன்று திருவிழா சிறப்பு கூட்டுப்பாடற் திருப்பலி மற்றும் சப்பரபவனி நடந்தது. மாலையில் நிர்வாகக்குழு மற்றும் இறைமக்கள் கூட்டம், கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் திருவிழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் சி.சவேரியார்புரம் பங்கு குரு சகாயஜஸ்டின் அடிகளார், தோமையார்புரம் இறை மக்கள் செய்தனர்.