உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கில்துறைப்பட்டில் மழை வேண்டி பூஜை!

மூங்கில்துறைப்பட்டில் மழை வேண்டி பூஜை!

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு மேட்டூரில் மழை வேண்டி தென்பெண்ணையாற்றில் யாக பூஜை பொது மக்கள் முன்னிலையில் நடந்தது. மூங்கில்துறைப்பட்டில் போதிய மழை இல்லாததால் குளம், ஏரி, கிணறு அனைத்தும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இதன் மூலம் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.இப்பகுதியில் உள்ள மேட்டூர் பொதுமக்கள், ஒன்று சேர்ந்து தென்பெண்ணையாற்றில் கிரி அய்யர் மேற்பார்வையில், கணபதி பூஜை வர்ணா பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின் ஒன்பது குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அவற்றிற்கு பூஜை செய்து தென்பெண்ணையாற்றில் ஊற்றினர். இப்பூஜையில், கிராம பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !