கடலில் போட்டாலும் கட்டுமரமாக மிதந்தவர்!
ADDED :3761 days ago
நாயன்மார்களில் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். சமண சமயத்தில் ஈடுபாடு கொண்ட இவர், வீரட்டானத்துறையில் (பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை) அருள்பாலிக்கும் சிவன் அருளால் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தார். சைவத்தில் இணைந்த அவரை சமண மதத்தில் ஈடுபாடு கொண்ட அரசனான மகேந்திர பல்லவன், சுண்ணாம்புக் காளவாசலில் இட்டும், விஷ உணவு கொடுத்தும், யானையின் காலில் இட்டும் கொல்ல முயற்சித்தான். ஆனால், சிவனருளால் நாவுக்கரசர் காப்பாற்றப்பட்டார். வேறு வழியின்றி, கல்லில் கட்டி கடலில் வீசும்படி ஆணையிட்டான். கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே, என்று வீரம்பொங்க பாடினார். கட்டியகல் பூவாக மாறி கடலில் மிதந்தது. நாவுக்கரசர் கரையேறினார். ஆச்சரிய மடைந்த மன்னன், மனம் மாறி சைவ சமயத்திற்கு மாறினான்.