உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு காளியம்மன் கோவிலில் 108 குடம் பாலாபிஷேகம்!

திருவாலங்காடு காளியம்மன் கோவிலில் 108 குடம் பாலாபிஷேகம்!

திருவாலங்காடு: ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று, திருவாலங்காடு காளி அம்மனுக்கு, 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது.திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, திருவாலங்காடு காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தில், அமாவாசை முடிந்த எட்டாம் நாளில், அம்மனுக்கு, 108 குடம் பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. எட்டாம் நாள், அம்மனின் சினம் தணிந்த நாளாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, நேற்று, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் இருந்து, 108 பக்தர்கள், பால் குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக, காளியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு, 108 குடம் பாலில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். மாலையில், அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !