கோவிந்தராஜ பெருமாளுக்கு சேஷ்டாபிஷேக உற்சவம்
ADDED :5213 days ago
சிதம்பரம் : சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆனி சேஷ்டபிஷேக உற்சவம் நடந்தது. 108 திவ்ய தேசங்களின் ஒன்றான சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத சேஷ்டாபிஷேக உற்சவம் நடந்தது. அதையொட்டி மூலவரான கோவிந்தராஜ பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான தேவாதி தேவர், புண்டரீகவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு சேஷ வாகனத்தில் உற்சவமூர்த்தியான தேவாதி தேவர், ஸ்ரீதேவி, பூதேவியாருடன் வீதியுலா காட்சி நடந்தது.