மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்!
ADDED :3731 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, ஜெகமுத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா துவங்கியது. இதையொட்டி, கடந்த 17ம் தேதி மணிமுக்தாற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, ஜெகமுத்து மாரியம்மன், சக்தி விநாயகர், வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு காப்புக் கட்டப் பட்டது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி முக்கிய நிகழ்வாக காலை 9:00க்கு மேல் பால்குடம் ஊர்வலம், செடல் உற்சவம், மாலை 4:00 மணிக்கு திரு விளக்கு பூஜை, 25ம் தேதி சாகை வார்த்தல், 26ம் தேதி காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது.