அவ்வையார் அம்மன் கோயிலில் கோயிலில் நடமாடும் பாலகம்
ADDED :3731 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அவ்வையார் அம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதை தொடர்ந்து நாகர்கோவில் ஆவின் நிறுவனம் சார்பில் இங்கு நடமாடும் பாலகம் திறக்கப்பட்டுள்ளது. ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன் இதனை திறந்து வைத்தார். பொது மேலாளர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். எல்லா செவ்வாய் கிழமைகளிலும் இந்த பாலகம் செயல்படும் என்று அசோகன் தெரிவித்தார்.