உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னுமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம்!

பொன்னுமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம்!

புதுச்சேரி: பொன்னுமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டை வேலாயதப்பிள்ளை நகரில் உள்ள பொன்னுமாரியம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. வரும் 24ம் தேதி அன்று காலை செடல் உற்சவமும், மாலை 6 மணிக்கு தேர்திருவிழாவும் நடக்கிறது. 25ம் தேதி மதியம் ஆரியமாலா, பொம்மி சமேத காத்தவராய சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. 26ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !