பொய்யாமூர்த்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்!
ADDED :4091 days ago
காரைக்கால்: ஆடி செவ்வாய் முன்னிட்டு காரைக்கால் பொய்யாமூர்த்தி விநாயகருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள பொய்யாமூர்த்தி விநாயகர் கோவிலில் ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு முலவர் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது.சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவில்பத்து ராஜகணபதி, கயிலாசநாதர் கோவில், அம்பகரத் துார் காளியம்மன், கடைத்தெரு மாரியம்மன், கோவில் பத்து பார்வதிஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்நடந்தது.