உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவேட்டம்மன் கோவில் நாளை உற்சவ கொடியேற்றம்

படவேட்டம்மன் கோவில் நாளை உற்சவ கொடியேற்றம்

பெங்களூரு: தர்மராஜா கோவில் வீதி, தேவி படவேட்டம்மன் கோவிலில், நாளை, அம்மன் உற்சவ கொடியேற்றம் நடக்கிறது.இக்கோவிலில், கடந்த, 17ம் தேதி, ஆடி மகா உற்சவம் துவங்கிய நிலையில், நாளை காலை, 8:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், 9:00 மணிக்கு அம்மன் உற்சவ கொடியேற்றம், இரவு, 7:00 மணிக்கு கங்கண பூஜையுடன் காப்பு அணிவிக்கப்படுகிறது. 8:00 மணிக்கு மகா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது.வரும், 31ம் தேதி மற்றும், ஆக., 7ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஹோமம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றன. ஆக., 14ம் தேதி அமாவாசையன்று, இரவு, 7:00 மணிக்கு, தேவி படவேட்டம்மன் பச்சை கரக ஊர்வலமும், ஆக., 16ம் தேதி, தேவி படவேட்டம்மனின் ஆடி மகா உற்சவம் நிறைவு பெறுகிறது. தேவி படவேட்டம்மன் கோவிலில், விரைவில், நவகிரக பிரதிஸ்தாபனம் நடக்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99868 52239 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !