ராமேஸ்வரம் கோயிலில் நவீன கேமராக்கள்!
ADDED :3729 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தர விட்டது. அதன்படி சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பிரகாரங்களில் "அனலாக் வகையை சேர்ந்த 21 கேமராக்களை கோயில் நிர்வாகம் பொருத்தியது. இந்த கேமரா பதிவுகளை சென்னையில் உள்ள இந்து அறநிலைதுறை ஆணையர் கண் காணித்து வந்தார். ஆனால், வீடியோ பதிவுகளை துல்லியமாக பார்க்க முடியவில்லை. அதி நவீன கேமராக்கள் பொருத்த ஆணையர் உத்தரவிட்டார். முதல் கட்டமாக உண்டியல் காணிக்கை கணக்கிடும் கோயில் கல்யாண மண்டபத்தை சுற்றி, "இன்டர்நெட் புரோடகால் (ஐ.பி) எனும் நவீன 11 கேமராக்கள் பொருத்தப் பட்டன.சில வாரத்தில் சுவாமி, அம்மன் சன்னதி, பிரகாரத்தில் இருந்த "அனலாக் கேமராவை அகற்றி புதியவை பொருத்தப்படும்.