உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு!

மதுரையில் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு!

திருநகர்: மதுரை திருநகர் சேமட்டான் குளம் கண்மாய் கரையில் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டின் ஒரு புறம் காவடி துாக்கி, நின்ற கோலத்தில் கருப்பணசுவாமி உருவமும், பின்புறம் எழுத்துகளும் இருந்தன. கல்வெட்டிலுள்ள  சுவாமியை பலர்  வழிபடுகின்றனர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கல்பூண்டி பாண்டுரங்கன் கூறியதாவது:  இக்கல்வெட்டு மூன்றரை அடி உயரம், ஒன்றே கால் அடி  அகலம் கொண்டது. கல்வெட்டின் படிகள் குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் கூடுதல் விபரங்கள் அறியப்படும். ஆய்விற்குபின், தஞ்சை தமிழ்  பல்கலையில்  ஒப்படைக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !