உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படுநெல்லி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா!

படுநெல்லி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா!

வாலாஜாபாத்: படுநெல்லி மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், மாரிய ம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி முதல் வாரத்தில், ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு ஆடி திருவிழாவை  முன்னிட்டு, கடந்த 19ம் தேதி, மாலை 5:00 மணி அளவில், கிராம தேவதை பொன்னியம்மனுக்கு கிராமவாசிகள் பொங்கலிட்டனர். இரவு அம்மன்  மலர் அலங்காரத்தில், வீதிஉலா வந்தார். திருவிழாவின் மூன்றாவது நாளான, நேற்று முன்தினம், காலை 8:00 மணி அளவில்,  அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகமும்; பகல் 1:00 மணி அளவில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தன. மாலை 5:00 மணி அளவில், பக்தர்கள் ராட்டிணத்திலும்; கயிறு  வடத்தில் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன்  செலுத்தினர். இரவு 8:30 மணி அளவில், மாரியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி,  பத்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !