பொருவளூர் முத்து மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா!
ADDED :3729 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் முத்து மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூரில் உள்ள நரிக்குறவர்கள் நேற்று முன்தினம் காலை முத்துமாரியம்மனுக்கு தீச்சட்டி மற்றும் பால்குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு தீமிதி நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேப்போன்று காமராஜ் நகரில் உள்ள மாரியம்மன் மற்றும் பழையூரில் உள்ள மாரியம்மனுக்கும் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.