முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா!
ADDED :3728 days ago
காளையார்கோவில்: காளையார்கோவில் கிழக்கு, வடக்கு தெரு முத்துமாரியம்மன்கோவில் முளைப்பாரி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு பால் உட்பட 12 விதமான சிறப்பு அபிஷேகம் நடந்தது, வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.முளைப்பாரியை கோவிலிலிருந்து எடுத்து வீதி உலா வந்து அம்மன் குளத்தில் கரைத்தனர்.