உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கிலிக் கருப்பர் வருகை அலங்காரம்

சங்கிலிக் கருப்பர் வருகை அலங்காரம்

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம் துடி துடிக்குது
கச்சை வரிஞ்சுகட்டி கருங்கச்சை சொங்கமிட்டு
காலிரண்டில் சிலம்பு கொஞ்ச - வாராரய்யா கருப்பசாமி
அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம் துடி துடிக்குது
வெள்ளை நல்ல குதிரையேறி வீச்சருவா கையில் கொண்டு
வீதிவலம் சுத்தியல்லோ வாராரய்யா கருப்பசாமி

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம் துடி துடிக்குது
சங்கிலியில் கோத்தமணி கலகலென ஓசையிட
சத்திரத்து வீதியெல்லாம் தூள்பரக்க ஆடிவாரார்

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம் துடி துடிக்குது
நட்ட நடுநிசிதனிலே நல்ல சிவராத்திரியில்
கொட்டமெல்லாம் தானடக்க குதிரையிலே ஏறிவாரார்

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம் துடி துடிக்குது
வேடுகட்டி பொட்டுமிட்டு வெள்ளிநல்ல பிரம்பெடுத்து
மாடுமனை செழிக்கவென்று மகிழ்ச்சியோடு வாராரய்யா

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம் துடி துடிக்குது
சங்கிலிக் கருப்பனவன், சங்கடங்கள் போக்கவென்றே
தளையறுத்து ஓடிவாரார் தாளமோடு ஆடிவாரார்

அந்தோ இடிமுழங்குது - கருப்பசாமி
அங்கம்துடி துடிக்குது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !