நாமம் சூட்டுதல்
1. கூடம் வஸுதேவ கிரா கர்த்தும்
தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரந்
ஹ்ருத்கத ஹோர தத்வ: கர்க முநி:
த்வத் க்ருஹம் விபோ கதவாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே ஒருநாள் வஸுதேவரின் சொற்படி கர்க்கன் என்ற முனிவர். யாரும் அறியாதபடி, உனக்குப் பெயர் சூட்டுவதற்காக உனது வீட்டிற்கு வந்தார் அல்லவா?
2. நந்த: அத நந்தித ஆத்மா ப்ருந்திஷ்டம்
மாநயத் அமும் யமிநாம்
மந்த ஸ்மித ஆர்த்ரம் ஊசே த்வத்
ஸம்ஸ்காராந் விதாதும் உத்ஸுகதீ:
பொருள்; க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவரைக் கண்ட நந்தகோபர் மிகவும் சந்தோஷம் கொண்டார். முனிவர்களில் பெருமை மிக்க அவரை நன்றாகப் போற்றி உபசரித்தார். பின்னர் அவரை நோக்கி உனக்கு வேண்டிய நாம கரணத்தைச் சூட்டும்படி பணிவுடன் கூறினார்.
3. யது வம்ச ஆசார்யத்வாத் ஸுநிப்ருதம்
இதம் ஆர்ய கார்யம் இதி கதயந்
கர்க: நிர்கத புலக: சக்ரே
தவ ஸாக்ரஜஸ்ய நாமாநி
பொருள்: குருவாயூரப்பா! நந்தகோபரிடம் கர்க்கன், நான் யதுகுலத்தின் ஆசார்யனாக உள்ளேன். அதனால் நாம கரணத்தை ரகசியமாகவே சூட்ட வேண்டும் என்று மெய்சிலிர்த்துக் கூறினார். பின்னர் உனக்கும் உன் மூத்தவனுக்கும் நாமகரணம் சூட்டினார்.
4. கதம் அஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர நாம்ந:
அநந்த நாம்ந: வா
இதி நூநம் கர்க முநி: சக்ரே
தவ நாம ரஹஸி விபோ
பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஆயிரம் பெயர்களை மட்டும் அல்லாமல் எண்ண இயலாத அளவிற்குப் பெயர்கள் உடைய உனக்கு எந்தப் பெயர் வைப்பது என்று கர்க்கர் தனது மனதில் வியந்தார். அதனால்தான் ரகசியமாகப் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா?
5. க்ருஷி தாது ணகாராப்யாம் ஸத்தா
ஆநந்த ஆத்மதாம் கில அபிலபத்
ஜகத் அக கர்ஷித்வம் வா கதயத் ரிஷி:
க்ருஷ்ண நாம தே வ்யதநோத்
பொருள்: குருவாயூரப்பா! க்ருஷி என்ற வினைப் பகுதியும், ண என்ற எழுத்தும் சேர்த்தால் ஸத் ரூபமாகவும், ஆனந்த ரூபமாகவும் இருக்கும் தன்மையை அளிக்கும். இதனால் உனக்கு க்ருஷ்ணன் என்று பெயர் வைத்தார். மேலும் உலகத்தில் உள்ளவர்களின் பாவங்களை நீக்குபவன் என்ற பொருள் உள்ளது.
6. அந்யாந் ச நாம பேதாந் வ்யாகுர்வந்
அக்ரஜே ச ராம ஆதீந்
அதிமாநுஷ அநுபாவம் ந்யகதத்
த்வாம் அப்ரகாசயந் பித்ரே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த முனிவர் உனக்கு மேலும் பல பெயர்களைக் சூட்டினார். அதன் பின்னர் உன்னுடைய மூத்தவனுக்கு இராமன் என்ற பெயரையும் சூட்டினார். அதனைத் தொடர்ந்து தான் சூட்டிய பெயர்களுக்கான விளக்கங்களையும் கூறினார். பின்னர் உன்னுடைய உண்மையான ரூபத்தை அறிவிக்காமல், நீ மனிதர்களுக்கு உண்டான திறமை, பெருமைகளைக் கடந்து நிற்பாய் என்றார்.
7. ஸ்நிஹ்யதி ய: தவ புத்ரே முஹ்யதி ஸ:
ந மாயிகை: புந: சோகை:
த்ருஹ்யதி ய: ஸ து நச்யேத் இதி அவதத்
தே மஹத்வம் ரிஷி வர்ய:
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த முனிவர் உனது தந்தையிடம் உன்னுடைய மகன் மீது ஆசையும் ப்ரியமும் கொள்பவர்கள் எந்தவிதமான மாயை, துன்பங்கள் ஆகியவற்றில் இருந்தும் மீட்கப்படுவர். ஆனால் உனது மகனை தூஷிப்பவர்கள், வஞ்சிப்பவர்கள் அழிந்து விடுவர் என்றார்.
8. ஜேஷ்யதி பஹுதர தைத்யாந் நேஷ்யதி
நிஜபந்து லோகம் அமல பதம்
ச்ரோஷ்யதி ஸுவிமல கீர்த்தி: அஸ்ய
இதி பவத் விபூதிம் ரிஷி ஊசே
பொருள்: குருவாயூரப்பா! மேலும் அவர், இந்தக் குழந்தை பல அசுரர்களை அழித்துவிடும், தன்னை அடைந்தவர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் உயர்ந்த பதவியான மோட்சம் அளிக்கும். இப்படியாக இவனது குறையற்ற புகழை இந்த உலக மக்கள் கேட்பார்கள் என்றார்.
9. அமுநா ஏவ ஸர்வ துர்கம் தரிதாஸ்த்த
க்ருதா ஆஸ்தம் அத்ரதிஷ்டத்வம்
ஹரி: ஏவ இதி அநபிலபந் இதி
ஆதி த்வாம் அவர்ணயத் ஸ: முநி:
பொருள்: குருவாயூரப்பா! அந்த முனிவர் நந்த கோபரிடம், இவனால் அனைவரும் உங்கள் துயரங்கள் நீங்கப் பெறுவீர்கள். இவனையே முழுவதுமாக நம்புங்கள் என்றார். ஆயினும் நீதான் ஹரி என்று கூறவில்லை.
10. கர்கே அத நிர்கதே அஸ்மிந் நந்தித
நந்த ஆதி நந்த்யமாந: த்வாம்
மத் கதம் உத்கத கருண:
நிர்கமய ஸ்ரீமருத் புர அதீச
பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக உன்னைப் புகழ்ந்த கர்க்க முனிவர் சென்றவுடன், மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நந்தகோபர் முதலானோர் வெகுவாக உன்னைக் கொண்டாடினார்கள். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.