திருவாரூரில் நம்பி ஆரூரார் திருமண விழா கோலாகலம்!
திருவாரூர்: திருவாரூரில் நம்பி ஆரூரார் குரு பூஜை தினத்தை முன்னிட்டு பரவையார் உடனுறை நம்பி ஆரூர் திரு பெருகு திருமண விழா கோலாகலமாக நடந்தது. இதி ல் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூரில் நம்பி ஆரூரார் குரு பூஜை தினத்தை முன்னிட்டு ஆண்டு தோ றும் பரவையார் உட னுறை நம்பி ஆரூர் திரு பெருகு திருமண விழா கோலா கலமாக நடத்தப்படுகிறது. நேற்று 9 ம் ஆண்டு ஆடி சுவாத விழாவை முன்னிட்டு நந்த திருமண விழாவில் மேம்படு சடையனார்க்கும் வாழ்க்கை மனை இசை ஞானியார்க்கும் உலகம் உய்ய அவதாரம் செய்த நம்பி ஆரூரர்க்கும், கதிர்மணி மிகுந்த தென்னை உருத்திர கணிகைமாராம் பதியிலார் குலத்தில் தோன்றிய நங்கை பரவை நாச்சியார்க்கும் புற்றிடம் கொண்ட பெருமான் நிச்சயித்த வண்ணம் நடைபெறும் திரு பெருகு திருமண விழாவை முன்னிட்டு நேற்று காலை 6.00 மணிக்கு நம்பி ஆரூரரை நிறை குடம் கொடுத்து சுந்தரர்(நாலுகால்) மண்டபத்தில் இருந்து அழைத்தல் நிகழ்ச்சியும், காலை 8.00 மணிக்கு பரவை நாச்சியார் திரு மாளி கையில் இருந்து பெண் அழைப்பும் காலை 9.00 மணிக்கு நம்பி ஆரூரார்க்கும்– பரவை நாச்சியார்க்கும் திரு பெருகு திருமணம் அருள்மிகு தியாகராஜசுவாமி முன்னிலையில் நடந்தது. அதன் பின் மங்கள ஆசிர் வாதம் நடந்தத. ஆயிரங்கால் மண்டபத்தில் விருந் தோம்பல் நிகழ்ச்சி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவா மி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூர் 63 நாயன்மார் களுடன் தேரோடும் வீதியில் 63 நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் திருவீதியுலா காட்சி யும் அதனைத்தொடர்ந்து அன்னம்பாளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று 24 ம் தேதி மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூர் வெள்ளையானையில் கைலாய வாத் தியங்களுடன் வீதியுலா மற்றும் கைலாய காட்சியும் நடக்கிறது.