உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரமூர்த்தி சுவாமி மடத்தில் ஆடி சுவாதி குரு பூஜை விழா!

சுந்தரமூர்த்தி சுவாமி மடத்தில் ஆடி சுவாதி குரு பூஜை விழா!

உளுந்தூர்பேட்டை: திருநாவலூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடத்தில் ஆடி சுவாதி குரு பூஜை விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந் தூர்பேட்டை தாலுகா, திருநாவலூரில் அவதரித்த சைவ முதல் திருத்தொண்டர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடத்தில், ஆடி சுவாதி குரு பூஜை விழா  நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வேள்வி, வழிபாடு நடந்தது. தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, தீட்சை வழங்கினார். சி வனடியார்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (24ம் தேதி) காலை 7:15 முதல் மாலை 5:00 மணி வரை பவானி சிவனடியார் திரு க்கூட்டத் தலைவர் தியாகராசன் குழுவினர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவார முற்றோதல் நிகழ்த்துகின்றனர். மேலமங்கலம் பாலயோகி ராமதாஸ்  சுவாமி திருமடம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்துரை வழங்குகிறார். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !