காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :3726 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவைö யாட்டி கடந்த 22ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரஹ பூஜை, யாக சாலை பிரவேசம், விஸ்வசேனா வழிபாடு நடந்தது. நேற்று காலை 8 :00 மணிக்கு கடம் புறப்பாடு, 8:30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் லக்கிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர். மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்து.