கருணை விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED :3727 days ago
காஞ்சிபுரம்:மூங்கில் மண்டபம் அருகில் உள்ள, கருணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேக பூர்த்தி விழா, நேற்று நடைபெற்றது.காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகில், கருணை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அறநிலைய துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. சிதிலம் அடைந்து, பல ஆண்டுகளாக வழிபாடு இன்றி இருந்த, இக்கோவிலில், பக்தர்களின் பங்களிப்புடன் திருப்பணி செய்து, ஜூன் 7ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், நாள்தோறும் விநாயகருக்கு அபிஷேகம் நடந்து வந்தது. 48வது நாள் நிறைவு நாளான, நேற்று, மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. காலை, 9:00 மணிஅளவில், 108 சங்காபிஷேகம் மற்றும் யாகம் துவங்கி, 11:00 மணிக்கு நிறைவடைந்தன. காலை 11:30 மணியளவில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.