சதனபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3728 days ago
திண்டிவனம்: சஞ்சீவிராயன்பேட்டை சதனபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை சதனபுரீஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி முதல் கால வேள்வியும், 22ம் தேதி காலை இரண் டாம் கால வேள்வியும், மாலை மூன்றாம் கால வேள்வியும் நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, மூலமூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல், 6:30 மணிக்கு நான்காம் கால வேள்வியும் நடந்தது.காலை 8:30 மணிக்கு, விமானம் திருக்குட நன்னீராட்டும், தொடர்ச்சியாக மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டும் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.