கோவில்களில் அம்மா உணவகம்?
ADDED :3787 days ago
மதுரை: தமிழகத்தில் கோவில் வளாகங்களில், அம்மா உணவகம் சாத்தியமா என்பது குறித்து, இந்துசமய அறநிலையத் துறை, ஆக., 5ம் தேதி ஆய்வு நடத்துகிறது.அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில், மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.பெரிய கோவில்களில், 200 பேருக்கும், சிறிய கோவில்களில், 100 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியாற வேண்டும் என்பதற்காக, கோவில் வளாகங்களில், அம்மா உணவகம் சாத்தியமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம், அறநிலையத் துறை கமிஷனர் வீரசண்முகம் தலைமையில், சென்னையில் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.கோவிலுக்குள், அம்மா உணவகம் அமைக்க, அரசியல் ரீதியாக எதிர்ப்பு எழும்பட்சத்தில், கோவிலுக்கு வெளியில் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.